[ No Description ]



 



FREE

நாடு என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பும் எல்லையும் இருக்கும். அதே போல் நாட்டிற்கு என்று ஒரு தனிக்கொடி,முத்திரை என்றும் இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டின் கொடிக்கு தனி மரியாதை கொடுப்பார்கள். கொடியை தங்களின் உயிரினும் மேலாகக் கருதி அதனை பாதுகாப்பார்கள்.கொடிக்கு தனி மரியாதை செலுத்துவார்கள்.கொடியும்,முத்திரைகளும் பண்டைய ராஜாக்கள் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. துணியில் ஆனக் கொடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ரோமானியர்கள் ஆவர்.கி.பி.1218 ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கி அதை தேசியச் சின்னமாக உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க்.அதன் பிறகே உலகின் அனைத்து சுதந்திரம் பெற்ற நாடுகள் தங்களுக்கு என்று தேசியக் கொடியை உருவாக்கிக் கொண்டனர். இந்திய நாட்டிற்கு என்று தேசியக் கொடி உள்ளது.அதுதவிர தேசிய பாடல் ,தேசியகீதம் ,முத்திரை காலண்டர் என பல சின்னங்கள் உள்ளன.தேர்வு செய்யப்பட்ட சின்னங்கள் யாவும் மிகவும் கவனத்துடனே தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.அதனைப் பற்றிய தகவல்களை இப்புத்தகத்தில் காணலாம். இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு.இ.தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமிகு.செ.நமசிவாயம் அவர்களுக்கும்,தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு .பெ.சாம்சுரேஷ் அவர்களுக்கும் எனது நன்றி.இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட FreeTamilEbooks.com குழுவினருக்குமனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளுடன், ~ஏற்காடு இளங்கோ
view book