[ No Description ]



 



FREE

பதிப்புரிமை அற்றது. இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். *** நீங்கள் படிக்கப் போகிற இந்தப் புத்தகம். தரம் தாழ்ந்து நின்ற தமிழினத்திற்காக, சமூகநீதி வேண்டி, வாழ்நாளெல்லாம் பகுத்தறிவுப் பாதையில் போராடி வெற்றி கண்ட தந்தை பெரியார் என்னும் ஒப்பற்ற மாமனிதரைப் பற்றிய புரட்சிக் கதை இது. சமூகத்தில் நிலவியிருந்த பழைய மூடப்பழக்க வழக்கங்களையும்; சாதி சம்பிரதாயங்களையும்; சமூக ஏற்றத்தாழ்வுகளையும், எதிர்த்து நின்று; அறிவுப்பூர்வமாகப் போராடிய தந்தை பெரியார் ஓர் பகுத்தறிவுப் பூங்காவாகவே திகழ்ந்தார். அவரது ஒப்பற்ற அறிவுப் பூங்காவில் பூத்த புரட்சிப் பூக்களின் இதழ்கள் ஒவ்வொன்றிலும், முட்களின் இரக்கமற்ற கீறலைக் காணலாம். தாழ்த்தப் பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாளெல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரது வருகை, திராவிட மக்களது இருண்ட வாழ்வில் தோன்றிய கறுப்புச் சூரியன், அவர்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டி புதுவழி காட்டிய பகுத்தறிவு சோதி! நொந்து போயிருந்த திராவிடர் உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம் தந்தை பெரியார். இப்படித்தான் அபூர்வமாகச் சிலர் பிறக்கிறார்கள். அடிமை இந்தியாவின் விடுதலைக்கு அகிம்சா முறையில் வழிகாட்ட காந்திமகான் வந்தது போல – நிறவெறி கொண்ட ஆங்கிலேயரிடமிருந்து, தனது கருப்பர் இனத்தை மீட்டு, அவர்களது அடிமை விலங்கறுக்க வந்த ஒரு மார்ட்டின் லூதர் கிங், போராடி வென்றதைப் போல – தமிழ் மக்களிடையே விஷம் போல் பரவி வந்த சாதி வெறியையும்; மூடநம்பிக்கைகளையும்; ஆதிக்க வெறியையும் அடியோடு அகற்றிட வேண்டித் தன் வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார்.
view book