வலையில் விழுந்த வண்ணங்கள் சில – I oleh ஶ்ரீதர் நாராயணன்
                Penulis:
                
                                      
                    ஶ்ரீதர் நாராயணன்
                                  
              
              
                Kategori:
                
                                      General Novel
                                                      
              
              
                ISBN:
                freetamilebook8
              
              
                Penerbit:
                
                  
                    Xentral Methods Sdn Bhd                  
                
              
              
                Ukuran file:
                3.08 MB
              
              
              
            Ringkasan
                இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரும்பாலும் கடந்த ஆறு வருடங்களாக இணையத்தில் நான் பதிந்து வந்தவை.  புத்தகங்கள் மற்றும் புனைவுகளுக்குள் திணித்துக்கொண்டு வாசிப்பதை மட்டும் முக்கிய பொழுதுபோக்காக கொண்டிருப்பவன்.  புனைவுகள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது  போன்ற பொழுது போக்குகளை அதிதீவிரமாகச் செய்பவன் என்றாலும் அவ்வப்போது விடாமல் ஏதாவது எழுதி வைத்திருக்கிறேன்.  இணையத்தில் பலரும் செய்வது போலவே நேர விரயம், வம்பு பேச்சுகளில் ஆர்வம் காட்டினாலும் அதையும் தாண்டி கொஞ்சமாவது எனது வாசிப்பை கூர்மையாக்கி கொள்ள முடிந்திருப்பதில் இணையத்திற்கும் பங்கிருக்கிறது.
தினம் “ஒரு பக்கம்’ எழுதவேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கிய என்னுடைய இணையதளத்தில் அவ்வப்போது (சோம்பேறித்தனமாம்) பதிந்த சில பக்கங்களை தொகுத்துதான் இந்த ‘வலையில் விழுந்த வண்ணங்கள் சில’ உருவாகியிருக்கிறது.
பெரும்பாலும் இணையத்தில் எழுதுபவை அந்த தளத்தினோடேயே முடங்கிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஏதாவது புத்தகத்திருவிழா நடக்கும்போது ஏற்படும் ‘திடீர்’ peer pressureல் வாசகர்கள் வீறுகொண்டு எழுந்து போய் அச்சு புத்தகங்கள் வாங்கும் வைபவத்தால் சில எழுத்துகளுக்கு பதிப்பகங்கள் வாயிலாக விமோசனம் கிடைக்கலாம்.
இந்த சங்கிலிக்கு மாற்றாக, தமிழிணையத்தில் ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருக்கும் நண்பர்கள் குழுவிற்கு நன்றியுடன் இந்த தொகுப்பின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்
இணையம் அளிக்கும் சாதகங்களில் இம்மாதிரியான புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதும் முக்கியமாகிறது.
தொடர்ந்து தொய்வில்லாமல் பணியாற்றுங்கள்.
உங்களன்பன்
ஶ்ரீதர் நாராயணன்              
            Ulasan
Jadilah yang pertama mengulas e-buku ini.
              Tulis ulasan anda
Ingin mengulas e-book ini? Silah Sign in untuk memulai ulasan anda.
 
                 
                     
                     
                     
               
               
               
               
               
               
         
               
          
          