காதலென்பது oleh கா.பாலபாரதி

காதலென்பது by கா.பாலபாரதி from  in  category
Kebijakan Privasi
Baca menggunakan
Kategori: General Novel
ISBN: tamil15
Ukuran file: 0.48 MB
Format: EPUB (e-book)
DRM: Applied (Requires eSentral Reader App)

Ringkasan

வாசிப்பில் காதல் கொண்டுள்ள அனைத்து இனியவர்களுக்கும், என் மனம் நிறைந்த வணக்கங்கள். எனது ஐந்தாவது நூலும், முதல் கட்டுரைத் தொகுதியுமான “காதலென்பது” என்னும் இந்த மின்னூலை தங்கள் மத்தியில் வெளியிடுவதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். காதலைப் பற்றிப் பேசும் அளவிற்கு எனக்கு வயது போதாது என்றாலும், அதைப் பற்றிய புரிதலை வெளிப்படுத்தும் ஒரு சரியான வயதில் நான் இருக்கிறேன் என்பதால், இந்நூல் முழுவதும் காதலைப் பற்றிய பல்வேறு மாறுபட்ட கருத்துக்களையும், அதன் உண்மைத் தன்மைகளையும் சரியான வாழ்க்கை நடைமுறைகளோடு எடுத்துரைப்பதோடு, அதன் அனைத்துப் பக்கங்களையும் விளக்கப்போகிறது. இது காதலை பற்றிய கதைகளை மட்டும் பேசப்போவதில்லை மனித உளவியல் சார் நடத்தைகளையும் விருந்தாக்கப் போகிறது. முழுக்க முழுக்க மானிட உளவியல் கூறுகளை, நம் வாழ்க்கை எதார்த்தங்களோடு ஒப்பிட்டுக் காட்டப்போகிறது. இந்நூல் கண்ணுக்குத் தெரியாமல் நம்மை இயக்கும் சில சக்திகளையும், நம்மால் இயக்கப்படக்கூடிய சில சக்திகளையும் முடிந்த வரை வெளிச்சமிட்டுக் காட்டப்போகிறது. நாம் யார், நமக்கான நோக்கம் என்ன, எதைத் தேடி ஓடுகிறோம், எங்கு மகிழ்ச்சி கிடைக்கும், ஏன் துன்பத்தில் சிக்கிக் கொள்கிறோம், நமக்கான பிரச்சனை என்ன, நம் சூழல் எது, ஏன் கோபம், விரக்தி, கட்டுப்பாடற்ற சிந்தனைகள், நிம்மதியின்மை போன்றவை உருவாகின்றன, தோல்விக்கான காரணம் என்ன போன்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து விளக்கவுள்ளது. இவை அனைத்திற்கும் அடிப்படை எங்கிருந்து துவங்குகிறது என்பதை எளிமையாக விளக்கப்போகிறது. இவற்றிற்கும் காதலுக்குமான தொடர்பினை வாழ்க்கை எதார்த்தங்களோடு ஆராயப்பட்டுத் தெளிவான விடையைத் தாங்கி நிற்கிறது. இனி வரும் தலைமுறையினர் மத்தியில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களை உளவியல் ரீதியாக அணுகவும், இளைஞர்கள் தங்களைத் தாங்கலே வழிநடத்துவதோடு திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகாணவும் வாழ்க்கையை முழுமையாகவும் இனிமையாகவும் வாழ்வதற்கு ஒரு சிறு உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன். ஆனாலும் இந்நூலின் அச்சானியாகத் திகழ்வது காதல் மட்டுமே. இதன் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்ட உளவியல், நம் காதல் எப்படிப்பட்டது, எதையெல்லாம் தரவல்லது, எதையெல்லாம் அழிக்கக்கூடியது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் காதல் எங்கெல்லாம் வெளிப்படுகிறது, எப்படியெல்லாம் மற்ற உணர்வுகளோடு தொடர்பு கொண்டுள்ளது என்பதையெல்லாம் எளிமையாக விளக்கப்போகிறது. காதல் பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கப் போகும் இந்த நூலை நீங்கள் வாசிக்கும் போது, இது உங்களைப் பற்றி எழுதிய நூலாகவோ அல்லது உங்கள் அருகில் இருந்து உங்களைக் கவனித்த ஒருவனின் குறிப்பாகவோ இருக்கலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதைப் பற்றி எதை எதையோ பேசி எங்கோ இழுத்துச் செல்வதை விட, இந்நூலின் பொருளடக்கத்தை பார்க்கும் பொழுதே இதன் தன்மை உணரப்பெறும் என்பதைக் கூறி, வாசிக்க வழி விட்டு விலகுகிறேன். சமுதாயத்திற்குத் தேவையான ஒரு நல்ல நூலைக் கொடுக்கின்றேன் என்ற மன நிறைவோடு, இந்நூலை வெளியிட உதவியாய் இருந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Ulasan

Tulis ulasan anda

Direkomendasikan