புவியிலோரிடம் oleh பா.ராகவன்

புவியிலோரிடம் by பா.ராகவன் from  in  category
Kebijakan Privasi
Baca menggunakan
Kategori: General Novel
ISBN: tamil24
Ukuran file: 0.87 MB
Format: EPUB (e-book)
DRM: Applied (Requires eSentral Reader App)

Ringkasan

இந்நாவலை நான் 1999 – 2000ல் எழுதினேன். இது வெளியானதே பலருக்குத் தெரியாது. வெளிவந்த காலக்கட்டத்தில் இதற்கு எழுந்த கண்டனங்களும் எதிர்ப்புகளும் நியாயமாக இந்நாவலை அதிகம் விற்கச் செய்திருக்க வேண்டும். அன்று சோஷியல் மீடியாக்கள் கிடையாது. அறிவுஜீவி விமரிசகர்களின் கருத்துகள் வெகு மக்களைச் சென்றடையும் சாத்தியங்கள் அநேகமாக இல்லை. சிற்றிதழ் சார்ந்த வாசகர்கள் மட்டுமே அவர்களை வாசிப்பார்கள். அவர்கள் பதில்வினை ஆற்றினால் அது வெளிவரவே குறைந்தது மூன்று மாதங்களாகும். எப்படியோ இது காணாமல் போய்விட்டது. இணையத்தில் திருமலை, பால ஹனுமான், பாஸ்டன் பாலாஜி போன்ற ஒருசிலர் இந்நாவல் பற்றி நல்ல விதமாக எழுதினார்கள். (யாஹு க்ரூப் காலம்.) சிலர், படித்தேன்; பிரமாதம் என்றார்கள். பலபேர் எங்கே கிடைக்கும் என்றார்கள். இதனை வெளியிட்ட பதிப்பாளர் இன்று எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஓரிரு வருடங்களுக்கு முன் இந்நாவலின் மறுபதிப்பைக் கஷ்டப்பட்டுக் கொண்டு வந்தேன். அதுவும் எங்கே போனதென்று தெரியவில்லை. இன்னும் சிலராவது இதைப் படிக்கலாம் என்று இப்போதும் ஆசையிருப்பதால் இதனை இலவச மின்னூலாக வெளியிடுகிறேன். நண்பர்கள் சீனிவாசன், ரவி ஆகியோருக்கு என் நன்றி. அட்டைப்படம் உருவாக்கியளித்த ஓவியர் ப்ரேமுக்கு என் அன்பு.

Ulasan

Tulis ulasan anda

Direkomendasikan